செங்குந்தர் சமூகத்தின் வரலாற்று மரியாதை – சோழர் காலத்தில் நிகழ்ந்த அபாரமான முத்துக் காணிக்கை
கடலூர் மாவட்டம், கட்டுமன்னார்கோவிலுக்கு அருகிலுள்ள உடையார்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அனந்தீசுவரர் கோவிலில், ராஜேந்திர சோழனின் ஆட்சியின் மூன்றாம் ஆண்டு (1014–1017 கி.பி) நடைபெற்ற ஒரு அபூர்வமான காணிக்கை கல்வெட்டில் ARE 613 of 1920 பதிவாகியுள்ளது.
அந்த கல்வெட்டின் படி:
"உடையார்குடி கிராமத்திலுள்ள கைக்கோளர்கள், 27.5 கலஞ்சு தங்கம் கொண்ட ஒரு குடைக்கம்பை வடிவமைத்து, அதில் 19,908 முத்துக்கள் பதித்து, கோவிலுக்குக் காணிக்கையாக வழங்கினர்."
இவ்வளவான அளவிலான முத்துக் காணிக்கையை ஒரே சமுதாயத்தினர் வழங்கியிருக்கின்றனர் என்பது, பண்டைய காலத்திலேயே செங்குந்த கைக்கோளர்கள் பெற்றிருந்த பொருளாதார வலிமையும், இறைவன் மீது கொண்டிருந்த பக்தியும், சமூக ஒற்றுமையும் பிரதிபலிக்கிறது. வேற எந்த சமூகமும் இவளவு பெரிய கோவில் திருப்பணி செய்ததாக தெரியவில்லை
மதிப்பீடு:
1 கலஞ்சு என்பது சுமார் 4.4 கிராம் தங்கத்திற்கு சமம்.
உயர்தர முத்துக்கள் ஒவ்வொன்றும் 0.5 முதல் 2 கலஞ்சு மதிப்புடையவை.
மொத்த காணிக்கை மதிப்பு 10,000 முதல் 40,000 கலஞ்சுகள் வரையிலானதாக மதிக்கப்படுகிறது.
இன்றைய மதிப்பீட்டில், இது சுமார் 172 கிலோ தங்கத்திற்கு ஒப்பானது, அதாவது 110 கோடியை நெருங்கும் மதிப்புடைய காணிக்கை.
இதேபோன்ற காணிக்கைகளுடனான ஒப்பீடு:
ராஜராஜ சோழன் மன்னர்– 13,000 முத்துக்கள் (திருவையாறு கோவிலுக்காக கொடுத்து உள்ளார்)
சோழி ராணி பஞ்சவன் மாதேவி – சுமார் 10, 000 முத்துக்கள்
உடையார்குடி கைக்கோளர்கள் – 19,908 முத்துக்கள்
அதாவது மன்னர்களை விட அதிகமாக கோவிலுக்கு தாபம் செய்த உடையார்குடி செங்குந்த முதலியார்கள்
இது வரை அறியப்பட்ட மிகப்பெரிய முத்துக் காணிக்கையாகும். மேலும், இது அரசு அல்லாத ஒரு சமூகத்தினரால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுப் பின்னணி:
இந்தக் கோயிலின் கட்டடப் பகுதிகள் பராந்தக சோழன் I ஆட்சியில் (கி.பி. 940) கட்டப்பட்டவை.
கோயிலின் முக்கியத்துவம் ராஜராஜ சோழர் மற்றும் ராஜேந்திர சோழர் காலங்களிலும் தொடர்ந்தது.
ராஜேந்திர சோழர், இந்தக் கோயிலை தனது குலதெய்வமாக (family deity) குறிப்பிட்டுள்ளார்.
அதனால், இங்கு வழங்கப்பட்ட முத்துக் காணிக்கை அந்தக் கோயிலின் அரசியல் மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது.
செங்குந்த கைக்கோளர்கள் சோழர் காலத்தில் நெசவுத் தொழில், படைத்துறை, படை தலைமைகள் போன்ற பிரிவுகளில் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த கல்வெட்டு, செங்குந்தர் சமூகத்தின் பொருளாதார வலிமைக்கும், சோழ அரசு மற்றும் கோவில்களுடனான தங்கள் உறவுக்கும், சமய பங்களிப்பிற்குமான இடத்தையும் வெளிப்படையாக உறுதிப்படுத்துகிறது.
Link: Click